அம்மி மிதிப்பது அருந்ததி பார்ப்பது ஏன்?

by Admin / 22-07-2021 03:16:36pm
அம்மி மிதிப்பது அருந்ததி பார்ப்பது ஏன்?

 

           திருமணத்தின் முக்கிய சடங்குகள் முகூர்த்த நேரத்தில், தாலி கட்டிய பின்பே ஆரம்பமாகின்றன. அம்மிகல்லின் மீது மண மகளின் பாதத்தை வைத்து, மணமகன் மெட்டி அணிவிப்பதும், புரோகிதர் வானத்தைப் பார்த்து, அருந்ததி பாருங்கள் என்று சொல்வதும் வழக்கமாகச் செய்யப்பெறும் சடங்காக உள்ளது. இதன் தாத்பர்யம் என்னவென்று யாரும் சொல்லவில்லை. சொல்லி கேட்கும் மனநிலையில் புதுமணத்தம்பதியர்களோ.. இல்லை, கல்யாண வீட்டாரோ தயாராக இல்லைகுறிப்பிட்ட நேரத்திற்குள் மண்டபத்தை காலிசெய்ய வேண்டும் என்கிற அவசரத்திலேயே இருப்பர்….

           முன்பெல்லாம் திருமணங்கள் இரவு நேரங்களிலேதான் நடந்தனஅதுவும் வீட்டின் முன்பு முற்றத்தில் உற்றார் உறவுகள் கூடியதிறந்த வெளியில் மணமகன் மணமகள் கழுத்தில் ஓலைநறுக்கிலான தாலி கட்டினான்பின்பு அக்னி வளர்த்து செய்யப்பெறும் திருமண முறை வந்த பொழுது பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டனஅதுவே சமூக கட்டமைப்பினை உள்ளடக்கிய சட்ட விதிகளாக மாறின..  அப்படி மாறிய பொழுதுதான் பொன்னால் செய்யப்பெறும் தாலி, காலில் அணிவிக்கப்பெறும் வெள்ளி மெட்டி இடம்பெற்றன…. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கோட்பாடும் உருவாயிற்றுபெண் ஆணின் சொத்துகணவன் என்கிறவனைத் தவிர பிறர் அவனைப் பார்ப்பதும் பேசுவதும் குற்றமாகவே கருதப்பட்டது. பெண் கற்புசிறப்பிற்குரியதாகச் சித்தரிக்கப்பட்டதுபெண் தன் கணவனைத்தவிர பிற ஆடவரை ஏறிட்டுக்கூடப் பார்க்கக் கூடாது என்று நிர்பந்திக்கப்பட்டாள்

           ஒரு ஆண், தன் மனைவி கற்புடையவளாக இருந்தால்தான் காளை போன்று தோளை உயர்த்திக் கம்பீரமாக சமூகவெளியில் நடந்து செல்ல முடியும்அப்படி இல்லையெனில், அவன் உயிரோடிருந்தும் பிணமாகவே பார்க்கப்படுவான். ஆக, ஆணின், கௌரவம், செல்வாக்கு, ஏன் சகலமும் பெண்ணின் கற்பிலேதான் அடங்கியிருக்கிறது எனும் பிம்பம் உருவாக்கப்பெற்று, பெண் வீட்டிற்குள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டியவள் ஆனாள். பெண் கடவுளாகச் சித்தரிக்கப் பெற்றாள்செல்வம் தரும் லட்சுமியாககல்விதரும் சரஸ்வதியாக வீரம் தரும் காளியாக ஏன் பஞ்சபூதங்களில் ஒன்றான நதிக்கு கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயு, காவேரி, கோதாவரி எனும் பெயர் கூட்டிப்புனிதப்படுத்தப் பெற்றாள்நிலத்தையும் பூமி மாதாவாக்கினர்இப்படியாக, ஒரு பெண் கற்பு எனும் கருத்தினால்ஆணால், உயர்ந்த அந்தஸ்துக்குரியவளாக உருவாக்கப்பட்டனாலும்அடிப்படையில் இக்கருத்துக்கள் தந்த அழுத்தம் அவளை ஆணின் அடிமையாகவே உருவாக்கிற்றுஅதைத்தொடந்து நிலைநிறுத்த புராணங்கள் வழி கதை எழுதப்பட்டனஅக்கதைகளில் ஒன்றுதான் திருமணத்தின் பொழுது அம்மிதிப்பதும் மற்றொன்று அருந்ததி பார்ப்பதுஇதோ கதைக்கு வருவோம்….

            கௌதம முனிவர்னு ஒருத்தர்கடுந்தவம் செய்தார். அவரின் தவத்தின் வலிமையை உணர்ந்த சிவபெருமான் என்ன வரம் வேண்டுமென்று கேட்கிறார்வரம் எப்படிப்பட்டதாகயிருந்தாலும் பரவாயில்லை. உன் தவம் அவ்வளவு மெச்சத்தக்கது என்று சொல்லகௌதம முனிவரோ

            தேவாதிதேவர்களும் மயங்கும் அழகில் படைக்கப்பட்டிருக்கும் அகலிகையை எனக்குத் தாரமாக்கித் தர வேண்டுமென்று கேட்கிறார்சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று வரம் தரகௌசிக முனிவரின் தர்மபத்தியாகிறாள், அகலிகை….

            அகலிகை எனும் பேரழகியின் அழகில் மயங்கித் திரிந்த தேவலோகத் தலைவன் இந்திரன்தான் அடைய வேண்டிய பெண் போயும் போயும் ஒரு முனிவனுக்குத் தாரமாகிப் போனாளேஎன்கிற விரக்தி.. கோபம் மேலிட.. அவளை எப்படியேனும் தனக்குரியவளாக்கிக் கொள்ள வேண்டுமென காமவேட்கை உச்சத்திற்குச் செல்லஒரு திட்டம் தீட்டினான் தேவஅரசன் இந்திரன்..

            ஒருநாள்எங்கும் இருள் வியாபித்துக்கிடந்த நடுஇரவுநிசப்த பொழுதுகள்.. இந்திரன் சேவலாக மாறி பொழுது விடிந்துவிட்டது எழுங்கள் என்பதற்காகச் சேவல் குரலாகக் கொக்கரித்தான் பொழுது விடிந்துவிட்டதா? அரக்க பரக்க எழுகிறார்கௌதமரிஷிஆனாலும், கண் எரிச்சலுடன் தூக்க கலக்கமாக இருப்பதாக உணர்ந்தார்குடிலுக்கு வெளியே வந்தார்கும்மிருட்டு.. விடியல் வரவில்லை என்பதாக எண்ண, சேவல் பொய்யா சொல்லப்போகிறது என்கிற நினைவோட.. குளிக்க ஆற்றங்கரை செல்கிறார்விடியலுக்கான ஆரம்ப ரேகைகள் எங்கும் படரவில்லை.. சந்தேகம் வலுக்கிறது, கௌதமருக்குஞானத்திருஷ்டியில் பார்க்கிறார்.. இந்திரன் சேவலாகக் குரலெழுப்பியதுபின்பு கௌதமர் போன்று வேடம் மாறிஅகலிகையைத் தம் இட்சைக்குப் பலியாக்கியது வரை தெரியவரஉடன் பர்னசாலை நோக்கிச் செல்கிறார்

 

 

முனிவரின் வருகையைத் தன் ஞானத்திருஷ்டியில் அறிந்த இந்திரன் தான் தரித்திருந்த கௌதம ரிஷியின் தோற்றத்திலிருந்து மாறிப் பூனையாக வடிவம் மாறி, வாசல் வழியாக வேகமாக வெளியேற எத்தளிக்கையில், முனிவர் தம் திருஷ்டியால் பார்த்து, ‘இந்திரனேஅங்கேயே நில்என்று கட்டளையிட…. தேவேந்திரன் பூனை உருவத்திலிருந்து தம் அய தோற்றத்திற்கு வந்தான்.

          ‘இந்திரனேதேவலோகத் தலைவனாகயிருந்தும்அடுத்தவர் மனையாளைக் கள்ளத்தனமாகத் தன் வசப்படுத்திக் கொண்டாய்எது தர்மம்.. எது புனிதம் என்பது அறியாதவனாய் நீ காமப்பித்துக் கொண்டு பெண்டாண்டு விட்டாய்அதனால், நீ செய்த பெரும் குற்றத்திற்குத் தண்டனையாக, எது வேண்டுமென்று ஆசைப்பட்டு வந்தாயோஅந்தபெண் பாகமே…. உன் உடம்பு முழுதும் முளைக்கட்டும்பார்ப்பவர்கள் உன்னைத் தூசிக்கட்டும். இதுவே உனக்குத் தண்டனை என்று சாபமிட

           முனிவர் தம் குடிலுக்குச் சென்று மனையாளாகிய அகலிகையிடம், என்ன? இப்படிச் செய்துவிட்டாய்கற்புநெறி கெட்டுவிட்டாயே.. என்று கேட்கஎதுவும் தெரியாதவளாகிய அகலிகை, ‘என்ன.. கற்புநெறி தவறிவிட்டேனா? என்ன சொல்கிறீர்கள் என்று பதற… ‘ஆம். பெண்ணே.. இந்திரனிடம் உன் கற்பை பறி கொடுத்துவிட்டாய் என்று கூற..

           ‘இந்திரனாயாரையும் பார்க்கவில்லை.. கற்புநெறி தவறவில்லைபதிலுரைத்தாள் அகலிகை.. “இல்லை.. நீ இந்திரனோடு இப்பொழுதுதானே சல்லாபித்தாய்”… “இல்லைஉங்களோடுதானே இருந்தேன்..” “அது நான் அல்லன்என்ரூபத்தில் வந்த இந்திரன்.” “என்ன சொல்கிறீர்கள்… “இந்திரன்தான் உன்னோடு என்ரூபத்தில் கலந்தவன்கணவன் யார்? வேற்று ஆள் யார் என்று பகுக்கக்கூட தெரியாதா?

           “எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் மாயமாக உள்ளது..” “மாயம் தான்மாயரூபமேஎன் ரூபமாகி உன்னைச் சுகித்துவிட்டதுஅதனால் கற்புநெறி தவறியதால்.. நீ இன்றிலிருந்து கல்லாய் மாறிப் போவாய் கோபத்தின் உச்சத்திலிருந்து கௌதமர் சாபமிடபதறிய அகலிகை, ‘அய்யோசுவாமிநான் எந்தத் தவறும் செய்யவில்லை.. உங்கள் உருவத்தில் வந்தவர் இந்திரன் என்று எனக்கு எப்படித்தெரியும். நான் சாதாரண மனுஷிதானே.. என்று அழகௌதமர் சாபத்தைத் திரும்ப பெறாதவராக நிற்கிறார்…. அகலிகை அழுது பலன் இல்லை என்றான 

Tags :

Share via