கணபதி ஹோமம் செய்வதால் என்ன நன்மை நிகழும்?

by Admin / 16-07-2021 03:12:41pm
கணபதி ஹோமம் செய்வதால் என்ன நன்மை நிகழும்?

 

       கணபதிஹோமம், எந்தவொரு நல்ல செயல்கள் தொடங்குவதற்கு முன்பாகச் செய்யப்படும் பூஜைஇது எல்லா விதமான ஹோமங்களுக்கும் முதன்மையானது…. ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்துச் செய்யப்பெறும் இவ்வோமம்நம் வாழ்வில் எந்தவிதமான தடைகள் வராமலிருப்பதற்காகச் செய்யப்பெறுவதுஅதாவது விநாயகருக்கு ஹவிஸ் என்கிற உணவை அளிப்பதன் மூலம் நாம் தொடங்கும் எந்தவொன்றிற்கும் தீமை நிகழாது காக்கஇக்கணபதிஹோமம் செய்யப்படுகின்றது.

             ஹோமம் செய்யப்பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கவை. அதனால், ஹோமக் குண்டத்திலிருந்து வெளியேறும் புகை காற்றில் பரவி நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும் ஆற்றலுடையது. ஹோமங்களில் கணபதிஹோமம் செய்வது மிகச் சிறப்புடையதுஏனெனில் இது விடியற்காலம் சூரிய உதயத்திற்கு முன்பாக நிகழ்த்தப் பெறுவதால் சிறப்பிற்குரியதாகிறது. ஹோமத்திலிருந்து வெளியேறும் புகை தேங்காய், எண்ணெய், நெய் மூலிகைகுணம் கொண்ட நன்கு காய்ந்து முற்றிய தண்டுகள், வேர்கள், புற்கள்இவை மருத்துவ குணம் பெற்றிருப்பவை.. சூரிய ஒளியின் சூடு பரவுதற்கு முன் இந்த புகை கலந்த காற்று எங்கும் வியாபித்திருக்கும் அக்காற்றைச் சுவாசிக்கும் பொழுது மருத்துவ குணம் கொண்ட காற்று நம் நுரையீரலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும். ஹோமம் செய்யும் வீடு, அலுவலகம் எங்கும் பரவியிருந்த கெட்ட விசயங்கள் நோய்க் கிருமிகள் யாவும் அழிந்துவிடும்…. அதனால் தான் கணபதிஹோமம் காலையில் செய்யப்பட வேண்டுமென்று சொல்கிறார்கள்.

கணபதி ஹோம மந்திரங்கள்

          “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்ளீம் க்கௌளம் கம் கணபதயே

           வர வரத சர்வஜனம் மே வசமாயை ஸ்வாஹா

      இம்மந்திரம் சொல்லி அவல் நிவேத்யம் ஹோமம் செய்தால் சர்வ வசியம் உண்டாகும்.

லட்சுமி விநாயகர்

           “ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய கணபதயே நம

            வர வரத சர்வஜனம்மே வசமாயை ஸ்வாஹா

      இந்த மந்திரம் தரித்திரத்தைப் போக்கும். தன அபிவிருத்தி கிடைக்கச் செய்யும்.

கணபதி ஹோமம் செய்வதால் என்ன நன்மை நிகழும்?
 

Tags :

Share via