இரண்டு பெண் ஆசிரியைகள் குடுமிபிடி சண்டை

by Editor / 26-05-2023 11:35:21pm
இரண்டு பெண் ஆசிரியைகள் குடுமிபிடி சண்டை

பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் இரண்டு பெண் ஆசிரியைகள் குடுமிபிடி சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள பிஹ்தா என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டு பெண் ஆசிரியர்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வகுப்பறையின் ஜன்னல் கதவுகளை மூடுவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு இடையே சண்டை வந்ததாக கூறப்படுகிறது. முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டனர். ஆசிரியர்களின் சண்டையை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

Tags : Two female teachers had a domestic fight in front of students at a school in Bihar state

Share via