தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம்.. எங்கள் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்- சீமான்

by Staff / 13-07-2023 02:54:32pm
தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம்.. எங்கள் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்- சீமான் தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவரது ட்விட்டர் பதிவில், 'ஒரு கிராமத்து பறவை சில கடல்களைக் கடந்த கதைதான் நீ.. கேள்விகளால் வேள்வி செய்த கவிதை நெருப்பு நீ.. கொஞ்சம் தேநீர் காட்டும் நிறைய வானம் நீ.. கருவாச்சிகளுக்கும் காவியம் எழுதி, கள்ளிக்காடுகளுக்கும் இதிகாசம் எழுதிய தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம்..! எங்கள் ஐயா! கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்' என குறிப்பிட்டுள்ளார்.
 

Tags :

Share via

More stories

Logo