சிதம்பரம் நடராசர் கோவில் கனக சபை வழி பாடு-சென்னை உயர்நீதி மன்றம்

by Admin / 14-07-2023 11:26:51pm
 சிதம்பரம் நடராசர் கோவில் கனக சபை  வழி பாடு-சென்னை உயர்நீதி மன்றம்

பிரசித்தி பெற்ற  சிதம்பரம் நடராசர் கோவிலில் கடந்த மாதம் நிகழ்ந்த ஆனி மாத திருமஞ்சன விழாவின் பொழுதுபக்தர்கள் கனகசபை மீதேறி சாமியை வழிபட அனுமதி கிடையாது என்று விளம்பர பலகையை கோவில் தீட்சிதர்கள்வைத்தனர்..இதனை அறிந்து அங்கு வந்த அறநிலைய அதிகாரிகள் விளம்பர பலகையை அகற்றினர்.இந்நிலையில்,இருதரப்புக்கும் மோதல் உருவானது.தமிழிநாடு அரசு மே,17 2022  இல் பக்தர் கனகசபை ஏறி வழிபட அனுமதியளித்தது...

இதனை எதிர்த்து ரமேஷ்  என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத்தொடர்ந்தார்.இவ் வழக்கு இன்று
விசாரணைக்கு வந்தது... விசாரணையின் பொழுது நீதிபதிகள்,பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபடுவதன் மூலம் தீட்சிதர்களின் உரிமை எங்ஙனம் பாதிக்கப்படும் என்றும் அப்படி பாதிப்பதாக இருந்தால் உச்சநீதிமன்றம்  சென்று இருக்கலாமே.?என்றும் கேள்விகணைகளை தெடுத்தனர்....அத்துடன் தீட்சதர்களுடன் சம்பந்தபடாத ஒருவர் பொதுநல வழக்கு தொடுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியதோடு வழக்கு விசாரணையை அக்டோபர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்திரவிட்டார்கள்.

 

Tags :

Share via