மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகை

by Staff / 17-07-2023 05:28:23pm
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகை

பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கர்நாடகா வருகை தந்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் மிக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் இன்று மற்றும் நாளை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு 24 கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

 

Tags :

Share via