வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக மாநில பொதுச் செயலாளர்

by Editor / 26-07-2023 02:12:06pm
வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக மாநில பொதுச் செயலாளர்

செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட தியாகி வீர வாஞ்சிநாதனின் மணிவண்டபத்திற்கு சென்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் மணிமண்டபத்தில் உள்ள மார்பளவு வீர வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.ஊடகப்பிரிவு மாநில செயலாளர் நாகராஜன் தென்காசி மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன்,செங்கோட்டை நகர தலைவர் நகர் மன்ற உறுப்பினர் வேம்புராஜ் நகர பார்வையாளர்  மாவட்ட ஓபிசி அணி தலைவர் மாரியப்பன் மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணைத் தலைவர் பேச்சிமுத்து மாவட்ட அமைப்புசாரா பிரிவு செயலாளர் காளி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் பட்டியல் அணி முன்னாள் மாவட்ட தலைவர் குமார்  கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via