இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை

by Staff / 05-08-2023 02:45:47pm
இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை

முறைகேடு குற்றச்சாட்டு வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதால் தனது எம்.பி. பதவியை இழக்கிறார் இம்ரான் கான், மேலும் அவர் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு தெஹ்ரீக் –இ – இன்சாப் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via