இந்தியா- பாகிஸ்தான் ஹாக்கி.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்

by Staff / 09-08-2023 01:26:26pm
இந்தியா- பாகிஸ்தான் ஹாக்கி.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்

7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும். இன்று (ஆக.9) லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன. ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கும் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Tags :

Share via