தென்காசியில் பரபரப்பு...நிருபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறையினரால் பரபரப்பு

by Staff / 14-08-2023 04:25:26pm
தென்காசியில் பரபரப்பு...நிருபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறையினரால் பரபரப்பு

தென்காசியில் பரபரப்பு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் தர்ணாவில் இருந்த நபர் குறித்து செய்தி சேகரித்த நிருபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறையினரால் பரபரப்பு ஏற்பட்டது.

 தென்காசி மாவட்டம்  கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மயிலப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் என்ற சுப்பையா என்பவர் தனது நிலத்தை அளக்க வேண்டும் எனக் கூறி நில அளவை பிரிவில் பணம் கட்டியதாக கூறப்படுகிறது பத்து மாதங்களைக் கடந்தும் நிலத்தை அளக்க சர்வேயர் யாரும் வராததால் தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சர்வே  பிரிவை சேர்ந்த அலுவலர்களை வாழ்த்தி பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி கேட்டிருந்தார்.  இதுவரையில் தனக்கான இடத்தை அளவீடு செய்யவும் இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்காமல் இருந்து வருவதால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் திடீரென தர்ணாவில் இருக்க  முற்பட்டார் உடனடியாக சுதாரித்த அலுவலர்கள் மற்றும் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது செய்தி எடுத்துக் கொண்டிருந்த நிருபர்களிடம்  நீங்கள் யார் எதற்காக செய்தி எடுக்கிறீர்கள் அவரை அழைத்து வந்தீர்களா என்ற கேள்விக்கணைகளால் நிருபர்களிடம்  மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மற்றும் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் எடுக்கப்பட்ட வீடியோவை உடனடியாக செல்போனை வாங்கி அளிக்குமாறும் மாவட்ட வருவாய் அலுவலர் போலீசாருக்கு உத்தரவிட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via