உதயநிதிக்கு பிரம்மாண்ட சிங்கத்தை பரிசாக வழங்கி அதிரசெய்த மாவட்ட செயலாளர்.

by Editor / 05-09-2023 10:57:17pm
 உதயநிதிக்கு பிரம்மாண்ட சிங்கத்தை பரிசாக வழங்கி அதிரசெய்த மாவட்ட செயலாளர்.

தென்காசி மாவட்ட திமுக சார்பில் மூத்த முன்னோடி விளக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் 1520 திமுக முன்னோடிகளுக்கு தலா ₹10 ஆயிரம் வீதம் பொற்கிழிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் இந்த நிகழ்வில் அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மூன்றை அடி உயரம் 4 அடி அகலம் 280 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான வெங்கலத்தாலான சிங்கத்தை பரிசாக வழங்கினார். அமைச்சர் உதயநிதி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட சிங்கத்தின் மீது உள்ள துணியை விளக்கியதும் சிங்கத்தை கண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிர்ந்து போனார்.

 

 உதயநிதிக்கு பிரம்மாண்ட சிங்கத்தை பரிசாக வழங்கி அதிரசெய்த மாவட்ட செயலாளர்.
 

Tags :

Share via