கிருஷ்ண ஜெயந்தி- கோகுலாஷ்டமி என்று கொண்டாடப்படும் ஒரு பண்டிகை

by Admin / 06-09-2023 11:23:13am
கிருஷ்ண ஜெயந்தி- கோகுலாஷ்டமி என்று கொண்டாடப்படும் ஒரு பண்டிகை

கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி என்று கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. ஆவணி மாதத்தில் தேய்பிறை நட்சத்திரமாகிய ரோகிணி நட்சத்திரத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது .

வட இந்தியாவில் ராசலீலா ஸஹீ அண்டி என இவ்விழா கொண்டாடப்படுகிறது .கிருஷ்ண பரமாத்மாவின்  இளமைக்கால வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இவ்விழா நிகழ்த்தப்படுகிறது. கோகுலத்தில் கோபியர்களோடு  கண்ணன் விளையாடிய காதல் விளையாட்டுகளை  நடித்து காட்டப்படுவதாகவும்  இப்பண்டிகை நிகழ்வு அமையும்

.தகி அண்டி மகராஷ்டிரத்தில் கொண்டாடப்படும். வெண்ணை தாழியை சிறுவர்கள்  கண்ணன்களாக  வேடமிட்டு  வெண்ணை தாழி வைத்திருக்கும் உயரமான கூம்பில் ஏறி அதை உடைக்கும் நிகழ்வு, தமிழகத்தில் ,கோகுலா அஷ்டமி என்று மாலை நேரத்தில் கொண்டாடப்படும். 

வாசலில் சிறுவர்கள் தங்கள் கால் பாதத்தை பதித்து கண்ணன் வீட்டுக்குள் வருவதாக இந்தச் சடங்கு நிகழும். குழந்தைகள் பட்டு உடை உடுத்தி வெண்ணை, முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற கண்ணனுக்கு பிடிக்கக்கூடிய பொருள்களை படைகளாக வைத்து வழிபடக்கூடிய ஒரு பண்டிகையே இது.

 

Tags :

Share via