ரூ.7.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று சேமிப்பு கிடங்குகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

by Staff / 08-09-2023 01:48:00pm
ரூ.7.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று சேமிப்பு கிடங்குகள்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ரூ.7.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று கிடங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், திருப்பூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 சேமிப்பு கிடங்குகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதே போல், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

 

Tags :

Share via