தென் மாவட்டங்களில் பயிரிட ஏற்ற பாசுமதி நெல் கண்டுபிடிப்பு 

by Editor / 26-07-2021 04:30:14pm
தென் மாவட்டங்களில் பயிரிட ஏற்ற பாசுமதி நெல் கண்டுபிடிப்பு 

 

தென் மாவட்டங்களில் பயிரிட ஏற்ற மத்திய கால பாசுமதி நெல் இரகத்தை மதுரை வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளது.


மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்யும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. 


நாற்று வீசி நடுதல் முறையில் நெல் நாற்றுக்களின் வயது 25 நாட்கள் எனவும் அதன் மொத்த மகசூல் 4199 கிலோவுடன் மொத்த வருமானம் ரூ.20,995 எக்டர் என்ற அளவிலும் இருப்பது கண்டறியப்பட்டு, அண்மைக்காலத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் வளரும் குளிர் தாங்கும் நெல் வகைக்கு எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் அளிப்பதால் வளர்ச்சி தூண்டிவிடப்படுகிறது.தழைச்சத்து மேலுரமிட்டபின், 1 சதவிகிதம் சோடியம் மாலிப்டேட் தெளிக்க வேண்டும். பிறகு 30 வது நாளில் ஒரு முறை அளிப்பதால் குளிர் அழுத்த நிலையில் அதிகளவு நெல் தானிய மகசூல் கிடைக்கும்.
வெண் முதுகுத் தத்துப் பூச்சிக்கு எதிரான நெல் வகைகளை பிரிப்பதன் மூலம், வெண்முதுகுப் பூச்சிக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட 21 பயிரிடும் மரபுவழி வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்கள் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.


சிலிகேட்டை கரைக்கும் பாக்டீரியா நுண்ணுயிருடன் கலந்த “ரைசோபியம் மற்றும் அசோஸ்பைரில்லம்” உற்பத்தி செய்யப்படுகிறது.இது இரசாயன யூரியா உரம் பயன்படுத்துவதைக் குறைத்து, பாஸ்பேட் மற்றும் சிலிக்கான் உரங்களை நெல் எடுத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கிறது.இந்த ஆராய்ச்சி மையத்தால் எம்.டீ.யூ 5 என்ற குறுகிய கால நெல் இரகம் கண்டுபிடித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரகம் வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டது.மேலும் ஏரி நீர் பாயும் பரப்புக்கு ஏற்ற இரகம்.தென் மாவட்டங்களில் பயிரிடுவதற்காக ஐ.ஈ.டீ., 153577 எனும் மத்திய கால பாஸ்மதி இரகம் கண்டறியப்பட்டுள்ளது.

 

Tags :

Share via