புரூசெல்லோசிஸ் புதிய வைரஸ் கேரளா மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

by Editor / 10-10-2023 10:10:17pm
புரூசெல்லோசிஸ் புதிய வைரஸ் கேரளா மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவ தொடங்கியது. மொத்தமாக 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் வேகமாக பரவிய நிலையில், அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் காரணமாக நிபா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டது.

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதனையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது.

 இந்த நிலையில், கேரள மாநிலத்தில் புரூசெல்லோசிஸ் என்ற புதிய வைரஸ் பரவி வருவது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நிபா வைரஸை தொடர்ந்து புரூசெல்லோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தந்தை, மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவகூடிய புரூசெல்லோசிஸ் நோய் மரணத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

 

Tags : புரூசெல்லோசிஸ் புதிய வைரஸ் கேரளா மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share via