அக்.21ல் ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் - இஸ்ரோ

by Staff / 16-10-2023 04:29:39pm
அக்.21ல் ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் - இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தடுத்து புதிய புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதன்படி, சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி சரித்திரம் படைத்தது. இதனையடுத்து, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் அக்.21ல் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அக்.21ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது

 

Tags :

Share via