இந்தியாவுக்கு சென்றால் அபராதம்: சவுதி அரேபியா

by Editor / 28-07-2021 08:37:49pm
இந்தியாவுக்கு சென்றால் அபராதம்: சவுதி அரேபியா



கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் மிகப்பெரிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் கட்டுப்பாட்டில் இல்லாததால் இந்தியாவுக்கு செல்ல ஐக்கிய அரபு நாடுகள் உள்பட பல நாடுகள் தடை விதித்துள்ளன என்பதும் அவற்றில் ஒன்று சவுதி அரேபியாவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முறையான அனுமதியின்றி இந்தியா உள்பட சிவப்பு நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சென்றால் பெரும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி மூன்று ஆண்டுகள் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு தனது நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா உள்பட ஒரு சில நாடுகளுக்கு பயணம் செய்வதை தடுக்கும் நோக்கில் இந்த எச்சரிக்கையை சவுதி அரேபியா விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via