சனிக்கிழமை கூடுகிறது சிறப்பு சட்டமன்ற கூட்டம்

by Staff / 16-11-2023 01:10:14pm
சனிக்கிழமை கூடுகிறது சிறப்பு சட்டமன்ற கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் வருகிற சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடக்கிறது. தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான மசோதா, கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான மசோதா, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே செயல்படும் வகையிலான மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

Tags :

Share via