ஹர்திக் பாண்டியாவை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்

by Staff / 27-11-2023 02:41:16pm
ஹர்திக் பாண்டியாவை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா மீண்டும் திரும்பியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் மீண்டும் வாங்கியது. ஹர்திக் கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு விளையாடி வந்த நிலையில், மும்பை அணி தற்போது ஹர்திக் பாண்டியாவை வாங்கியுள்ளது. ரோஹித் சர்மா இனி ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via