அதிமுக இன்னும் கொத்தடிமை தான் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்

by Staff / 29-11-2023 01:37:48pm
அதிமுக இன்னும் கொத்தடிமை தான்  இ.வி.கே.எஸ்.இளங்கோவன்

அதிமுக இன்னும் பாஜகவின் கொத்தடிமையாக தான் இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய இளங்கோவன், "ஊழல் வழக்குகளும், கோடநாடு வழக்கும் இருக்கும்வரை பாஜகவின் பிடியிலிருந்து எடப்பாடி பழனிசாமி தப்ப முடியாது. பாஜகவுடான கூட்டணி முறிந்ததாக அவர் போடும் நாடகத்தை தமிழர்கள் நம்பமாட்டார்கள். மக்கள் ஆதரவோடு திமுக - காங்., மதச்சார்பற்ற கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும்" இவ்வாறு பேசினார்.

 

Tags :

Share via