இலவச பயணம் மூலம் 60%  பெண்கள் பயனடைத்துள்ளனர் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் 

by Editor / 30-07-2021 04:00:38pm
 இலவச பயணம் மூலம் 60%  பெண்கள் பயனடைத்துள்ளனர் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் 



தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் மூலம் 60 சதவீத பெண்கள் பயனடைவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் 6 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசுவுடன் இணைந்து துவக்கி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்: வருவாய்த்துறை, தொழில்துறை, போன்றே போக்குவரத்து துறையும் மிகப் பெரிய துறை தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய அனுபவத்தை வைத்து எப்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்ற தெளிவான சிந்தனையோடு செயல்படுகிறார். மேலும், இந்தியாவிலுள்ள முதலமைச்சர்களில் முதலிடத்தில் ஸ்டாலின் உள்ளார் என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர்,  தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் மூலம் 40 சதவீதம் பெண்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் தற்போது 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் 13 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது திமுக ஆட்சியில் 14 ஆயிரத்து 217 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், கூடுதலாக 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
 

 

Tags :

Share via