இன்று முதல் இன்னும் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு. மீனவர்களுக்கு எச்சரிக்கை.

by Editor / 25-12-2023 04:36:00pm
இன்று முதல் இன்னும் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு. மீனவர்களுக்கு எச்சரிக்கை.

இந்தாண்டு பருவமழையானது ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் இன்று முதல் இன்னும் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும் எனவும் குமரிக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Share via