தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்? - அன்புமணி கேள்வி

by Staff / 02-01-2024 01:01:13pm
தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்? - அன்புமணி கேள்வி

தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 6,218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்த ரூ. 5.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்குவதற்கான சட்டம் கடந்த 2006ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்ட போதிலும் கூட அந்த சட்டம் இன்று வரை நடைமுறைக்கு வராதது நல்வாய்ப்புக் கேடானது. தமிழ் பயிற்றுமொழி, தமிழ் கட்டாயப் பாடம் ஆகிய பெருங்குறைகளை சரி செய்யாமல், தமிழ் மன்றங்களை மேம்படுத்துவதாலோ, தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகளை நடத்துவதாலோ மாணவர்களிடம் தமிழ்ப்பற்றை ஏற்படுத்த முடியாது என கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via