உதயநிதிக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

by Staff / 13-01-2024 04:49:39pm
உதயநிதிக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் நடிப்பில் நேற்று வெளியான 'கேப்டன் மில்லர்' படத்தை பார்த்த தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் நடிகரும் உதயநிதி ஸ்டாலின், ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து அற்புதமாக எடுக்கப்பட்ட படத்தில் நடித்த நடிப்பு அசுரன் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து தற்போது தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுக்கு பிடித்த கலையை, நீங்கள் பாராட்ட தவறியதில்லை. உங்கள் பாராட்டு எனக்கும் எனது கேப்டன் மில்லர் குழுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via