27 ஆம் தேதிக்குள் நிவாரண நிதி - எம்.பி., தகவல்

by Staff / 13-01-2024 04:35:37pm
27 ஆம் தேதிக்குள் நிவாரண நிதி - எம்.பி., தகவல்

மதுரை எம்.பி., வெங்கடேசன், தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டில் இயற்கை பேரழிவுகள் வடக்கும், தெற்குமாக இரண்டு முறை நடந்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனால் ஒன்றிய அரசு இன்றுவரை நிவாரணநிதி தரவில்லை. தமிழக முதல்வர் கேட்ட நிவாரண நிதியை உடனடியாக வழங்ககோரி அமித்ஷா அவர்களை சந்தித்து வலியுறுத்தினோம் என்றும், வரும் 27 ஆம் தேதிக்குள் நிவாரண நிதி வழங்குவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார் எனவும் பதிவிட்டுள்ளார். தமிழக எம்பிக்கள் குழு உள்துறை அமைச்சரை சந்தித்த பிறகு அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via