மயிலாப்பூரில் பாஜக அலுவலகத்திற்கு சீல் வைப்பு

by Staff / 09-02-2024 05:10:40pm
மயிலாப்பூரில் பாஜக அலுவலகத்திற்கு சீல் வைப்பு

சென்னை மயிலாப்பூரில் திறக்கப்பட்ட பாஜக தேர்தல் அலுவலகத்திற்கு இன்று அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அலுவலகம் திறக்கப்பட்டதாகக் கூறி சீல்வைக்கப்பட்டது. வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என்று கோயில் இடத்தை வாடகைக்கு எடுத்து அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால், சென்னை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் பாஜக தேர்தல் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

 

Tags :

Share via