வங்கதேசத்தின் பிரதமராக ஐந்தாவது முறையாக பதவியேற்பு

by Staff / 27-02-2024 03:54:59pm
வங்கதேசத்தின் பிரதமராக ஐந்தாவது முறையாக பதவியேற்பு

ஷேக் ஹசீனா வங்கதேசத்தின் பிரதமராக ஐந்தாவது முறையாக ஜனவரி 11ஆம் தேதி பதவியேற்றார். வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 299 இடங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில், அவாமி லீக் கட்சி மட்டும் 223 இடங்களில் வெற்றி பெற்றது. ஷேக் ஹசீனா கோபால் கஞ்ச் - 3 தொகுதிகளில் வெற்றி பெற்றார். எட்டாவது முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via