மாமியாரை புளிய மரத்தில் மோதி கொன்ற மருமகன்.கோமாவில் இருந்த மாமியார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.மருமகன் தலைமறைவு

by Editor / 03-03-2024 12:07:21am
மாமியாரை புளிய மரத்தில் மோதி கொன்ற மருமகன்.கோமாவில் இருந்த மாமியார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.மருமகன் தலைமறைவு

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட திருப்பள்ளி முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாரதி.இவரது கணவர் சேகர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.விஜய பாரதி தனது இரு மகள்களுடன் திருப்பள்ளி முக்கூடலில் வசித்து வந்தார்.இந்த நிலையில் மூத்த மகள் புவனா கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருவாரூர் அருகே உள்ள பள்ளிவாரமங்களம் பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

விஜயபாரதியின் இரண்டாவது மகள் கல்பன சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.ரித்தீஷ் புவனா தம்பதியினர் கடந்த மூன்று வருடமாக விஜய பாரதி வீட்டில் வசித்து வருகின்றனர்.பிரதீஷ் தினமும் கூலி வேலைக்கு சென்ற நிலையில் குடித்துவிட்டு வந்து வீட்டில் தினமும் தகராறு செய்வது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது.இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 18ம்  தேதி இரவு கணவன் மனைவிக்கு இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில்  மாமியாரை மூங்கில் கட்டையால் குடிபோதையில் இருந்த ரித்திஷ் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து மாமியர் விஜய பாரதியை  இழுத்துச் சென்ற ரித்தீஷ் வீட்டிற்கு அருகில் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார். இதில் விஜய பாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனை மறைத்து மகள் புவனா அடுத்த நாள் காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் விஜய பாரதியை  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி  சென்னையில் இருந்து வந்து கல்பனா தனது அம்மாவை அக்காவின் கணவர் தாக்கி விட்டதாக நன்னிலம் காவல் நிலையத்திலபுகார் அளித்தார்.அதனைத் தொடர்ந்து ரித்தீஷ் குடும்பத்துடன் தலைமுறைவாகியுள்ளார். இந்தநிலையில் 13 நாட்கள் திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜயபாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via