கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது - இலங்கை அமைச்சர்

by Staff / 05-04-2024 12:04:10pm
கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது - இலங்கை அமைச்சர்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ள நிலையில், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது; இலங்கை மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன. இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும் என்பர் தெரிவித்தார்.

 

Tags :

Share via