நில்லுங்க ..கவனிங்க ..செல்லுங்க..வடகிழக்கு பருவமழைக்காலம் ஆரம்பமாயிட்டு...

by Editor / 19-10-2022 10:25:42pm
நில்லுங்க ..கவனிங்க ..செல்லுங்க..வடகிழக்கு பருவமழைக்காலம் ஆரம்பமாயிட்டு...

வடகிழக்கு பருவமழைக்காலம் ஆரம்பமாயிட்டு...

நெனச்சா மப்பு,மழை,காத்து,புயல்,இடி,மின்னல்ன்னு வெளுத்துக்கட்டுது.

கரண்டு எப்பவரும், எப்ப போவுமுன்னு யாருக்கும் புலப்படாது. அதனால,

1)செல் போனை வெளில எடுக்க வேண்டாம். பொழுது சாஞ்ச ஒடனே 'நெட்'டை ஆப் பண்ணிடுங்க.

2)வீட்டைச் சுத்தி தண்ணி நிக்காம பாத்துக்கங்க.

3)எல்லாருமே சுடவச்ச தண்ணிய குடிங்க.

4)மூணுவேளையோ, ரெண்டு வேளையோ, எப்பவும் சூடாவே சாப்பிடுங்க.

5)அவசரம் ஆத்திரதுக்கு உதவும், நர்ஸ் கொடுத்த காய்ச்சல் மாத்திரை,சிரப்பு கைவசம் இருக்கட்டும்.

6)குழந்தைகளுக்கும் வயசானவங்களுக்கும் தேவைப்படும் மருந்து மாத்திரைகளுக்கு அலையாமல் பாத்துக்குங்க.

7)ஈரத்துணியை கட்டாதீங்க.

8)மண்ணெண்ணெய், மெழுகுவர்த்தி,தீப்பெட்டி,சுவரொட்டி,சிமிலி,ஹரிக்கன்,டார்ச்லைட்,சார்ஜ்லைட்,FM ரேடியோ எப்பவும் ரெடியா இருக்கட்டும்.

9)காசுபணம் கொஞ்சூண்டு இருக்கட்டும்.

10)ஆட்டோகாரர் நம்பர சில இடங்களில்  குறித்து வைங்க.

11)பூச்சி பொட்டு வந்தா தட்ட,சுமாரான கம்புகழி 5 அடில ஒன்னு ரெண்டு இருக்கட்டும்.

12)பொதுவாவே எப்பவும் ஹீட்டர் போட்டுக்கிட்டு குளிக்க வேண்டாம், அதுல கரண்டு வருதாம்.

13)சொன்னா கேக்க மாட்டாங்க, நம்மளும் வாங்காம இருக்கக்கூடாது.இந்த சிவகாசி வாண்டுகளுக்காக, தில்லுமுல்லானா வெடியெல்லாம் வாங்கிக்குடுக்காம,சிம்புலா வெடி பர்ச்சேஸ் இருக்கட்டும்.

14)லேசா நெனைஞ்சாலும் பெரியவங்களுக்கே பெரியப்பெரிய காய்ச்சல் எல்லாம் வருது. பசங்கள நனைய விடாதீங்க.

15)காய்கறி கூடையில இஞ்சி கெடந்துகிட்டே இருக்கட்டும். அஞ்சரை பெட்டியில் சுக்கு கண்ணு ஒன்னு ரெண்டு போட்டு வைங்க* 

 

Tags :

Share via