அடுத்தடுத்து சிக்கும் பணம்.. நயினாருக்கு நெருக்கடி

by Staff / 07-04-2024 04:43:52pm
அடுத்தடுத்து சிக்கும் பணம்.. நயினாருக்கு நெருக்கடி

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் குணசேகரன் வீட்டில் கணக்கில் வராத ரூ.3.72 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். முன்னதாக தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடியுடன் பிடிபட்ட நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல இடங்களில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து சிக்கும் பணத்தின் மூலம் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via