அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.

by Editor / 13-04-2024 12:26:22am
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் ஆதரித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார் .இதன்தொடர்ச்சியாக கடையநல்லூர் மற்றும் சங்கரன் கோவிலில் பிரச்சாரம் செய்துவிட்டு குருவிகுளம் அருகே கரட்டுமலை சோதனைச்சாவடியில் சோதனை நடைபெற்றது.திருச்செந்தூர் செல்லும் வழியில் அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை யிட்டனர் இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது காரை விட்டு அமைச்சர் உதயநிதி இறங்கவில்லை. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் அதிகாரிகள் சமாதானம் அடைந்தனர், மேலும் ஏற்கனவே கடந்த 10 தினங்களுக்கு முன்பு சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா காரை புளியங்குடி சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா என்பவர் சோதனை செய்யாமல் அனுப்பியதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அரசுக்கும் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் தனது காரை நிறுத்தி சோதனை செய்ய அனுமதி அளித்தது அதிகாரிகள் மத்தியில் நிம்மதியை அடையச் செய்தது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளர் ஜான்பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது திமுகவினர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகளை நடத்துவது வருவதாகவும் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரின் கட்டு கட்டாக பணம் இருப்பதாகவும் ஒரு வாக்குக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.
 

Tags : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.

Share via