பொன்முடி வழக்கு.. மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்

by Staff / 15-04-2024 03:35:50pm
பொன்முடி வழக்கு.. மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து தன்னிடம் கையெழுத்து வாங்கியதாகவும், வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடியின் தண்டனை தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo