திமுக-வில் இணையவுள்ள அதிமுக-வின் முக்கிய பிரபலம்…!

by Admin / 20-08-2021 12:57:56pm
திமுக-வில் இணையவுள்ள அதிமுக-வின் முக்கிய பிரபலம்…!

அ.தி.மு.க  முன்னாள்  எம்.பி  பரசுராமன் விரைவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க வில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தஞ்சை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 5 ஆண்டுகாலம் தஞ்சை தொகுதியின் எம்.பியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன் என்றார்.

தஞ்சை ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி, சாலை பணி, பெரியகோவிலில் இருந்து சிவகங்கை பூங்கா வரை புதுப்பிக்கும் பணிக்கு முதல்தவணையாக ரூ.70 லட்சம் நிதி பெற்றுத்தந்தது, என 5 ஆண்டுகளில் 527 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணிகளை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் விடவில்லை. அவரும் மக்களிடம் எடுத்து சொல்லவில்லை. எனக்கும், அவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் எதுவும் கிடையாது என்றார்.

இதனால் நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது சிறப்பாக ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் விரைவில் இணைய உள்ளேன் என்றவர், எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் தி.மு.க.வுக்கு செல்லவில்லை என்றார்

 

Tags :

Share via