‘நீட்’ தேர்வுக்கு எதிராக புதிய சட்டம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 02-09-2021 08:58:52pm
‘நீட்’ தேர்வுக்கு எதிராக புதிய சட்டம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட்’ தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட்டு அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் இடஒதுக்கீடு முறையையே பின்பற்ற ஒன்றிய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 2021 22ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பை சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘தமிழ்நாடு அரசு, மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முதலமைச்சர் கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைத்து உத்தரவிட்டார்.அந்தக் குழுவானது கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதனை செயல்படுத்தும் பொருட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது, மேற்காணும் குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீர் தேர்வினை புரிந்துகொள்வதற்கு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது, இது மருத்துவக்கல்வி செயற்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்திற்கான சமூகநீதியை பாதுகாப்பை உறுதி செய்யும்.

தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது தற்போது ஒன்றிய அரசு அனைத்து இந்திய தொகுப்பு இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்த நிதியாண்டு முதல் இளநிலை முதுநிலை பல் மருத்துவர் சேர்க்கைக்கு பின்பற்ற முடிவு செய்துள்ளது.

மாநில அரசால் பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையை அகில இந்திய தொகுப்பிற்கு மாநில அரசால் அளிக்கப்படும் இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது இந்த மருத்துவமனையில் 7 மருத்துவ உயர்சிறப்பு உரிமைகளும் 12 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு களும் செயல்படும் இதற்கான விரிவான திட்ட மதிப்பீடு பொதுப்பணித் துறையால் தயார் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.புகையில்லா பொது இடங்கள்

புகையில்லா கிராமங்கள், புகையில்லா தூதரகங்கள், புகையில்லா சென்னை மற்றும் புறநகர் காவல் நிலையங்கள், புகையில்லா சிறைச்சாலைகள், புகையில்லா போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் வாகனங்கள்

புகையில்லா தமிழ்நாடு அஞ்சலகங்கள், புகையில்லா கல்வி நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகள் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், புகையில்லா அரசு கட்டடங்கள், புகையில்லா உணவு விடுதிகள் வணிக வளாகங்கள், புகையில்லா தொழிற்சாலைகள், புகையில்லா குடிசைப் பகுதிகள், புகையில்லா திரையரங்குகள் உயர்நீதிமன்றம் தலைமைச்செயலகம் மற்றும் பலபுகையில்லா பொது இடங்களாக அறிவிக்கப்படுகிறது.

தேவைக்கேற்றவாறு அவசர விதிகளை முறையாக ஒதுக்கீடு செய்வதன் மூலமாக அவசர சிகிச்சை ஊர்தியில் சென்றடையும் கால அளவு 15.0 நான்கு நிமிடங்கள் என 2011ஆம் ஆண்டு இருந்தது இது 2020ஆம் ஆண்டில் 14.4 5 நிமிடங்கள் ஆக குறைக்கப்பட்டுள்ளது சென்னை மாநிலத்தில் அவசர சிகிச்சை ஊர்தியில் நேர அளவு 11 நிமிடங்களில் இருந்து 7.32 படங்களாக குறைந்துள்ளது.டி.ஏ.ஈ.ஐ. மற்றும் இதர தொடர்புடைய அரசுத் துறைகளில் சீரிய முயற்சியின் காரணமாக சாலை விபத்து இழப்புகள் 3.8 சதவீதம் குறைந்துள்ளது கிடந்த 2018 ஆம் ஆண்டு சாலை விபத்து தொடர்பான இறப்புகள் 12,216 ஆக இருந்தது இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 10 ,575 ஆக குறைந்துள்ளது.

குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்திட, பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல் போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அடுத்த பத்து ஆண்டுக்கு தொலைநோக்கு செயல்திட்டம் வகுத்து இருக்கிறது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் இதன் அறிவிப்பு உள்ளது.

50 லட்சம் பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்பை உருவாக்குதல், அனைத்து குறி நிறுவனங்களுக்கும் முறையான வங்கிக்கடன் இணைப்பை உறுதி செய்தல், தேசிய ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 15% ஆக உயர்த்துதல், பத்தாயிரம் ஆயிரம் ஏக்கர் நிலம் வங்கியை உருவாக்குதல் உள்ளிட்ட செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.ஒன்றிய அரசின் ஆதரவோடு துணை சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை "அனைவருக்கும் நலவாழ்வு மையங்கள்" ஆக மாற்றி கூடுதல் சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

2021 -22ம் ஆண்டில் 4 லட்சம் தாய்மார்களுக்கு கருத்தடை வளையம் பொருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ நிலையங்களில் கருத்தடை வளையம் பொருத்த ஊக்குவிக்கும் பொருட்டு குழந்தை பிறந்தவுடன் பொருத்தப்படும் பேறுகால கருத்தடை வளையம் மற்றும் மருத்துவர்கள் கருக்கலைப்பிற்கு பின் பொருத்தப்படும் கருத்தடை வளையம் ஏற்கும் தாய்மார்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக 300 ரூபாயும், பேறுகால கருத்தடை வளையம் பொருத்துவதால் அடுத்தடுத்த குழந்தைகளுக்கான இடைவெளி 36 மற்றும் அதற்கு மேற்பட்ட மாதங்களாக உயர்வதோடு மாநிலத்தில் தாய் சேய் நலத்தையும் உறுதிப்படுத்தும்.

கடந்த 2020 - 21 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 622 தாய்மார்களுக்கு கருத்தடை வளையம் பொருத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 4 லட்சம் தாய்மார்களுக்கு கருத்தடை வளையம் பொருத்த உத்தேசிக்கப்பட்டு இருப்பதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் நவீன கர்ப்பத்தடை தடுப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு நடமாடும் குடும்ப நல விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்க்காக கடந்த மாதம் 28ம்தேதி வரை மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 387 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை எதிர்கொள்ள மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுஅமைக்கப்பட்டுள்ளதோடு, விரிவான சிகிச்சை வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் 1.48 லட்சம் சைபோசோமல் ஆம்போடெரசின் - பி inj-50 மி.கி குப்பிகள், 2.5லட்டம் பொசகோனசோல் 100 மி.கி மாத்திரைகள் மற்றும் 7 ஆயிரம் பொசகோனசோல் inj 300 மி.கி குப்பிகள் கொள்முதல் செய்யப்பட்டு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது.

சுகாதாரத்துறையில் அண்மையில் தொடங்கப்பட்ட முயற்சி மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை 5.8.2021 அன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக செயல்படுத்தப்படிட உள்ளது. 28.8.2021 வரை மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரம் பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories