பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

by Editor / 05-09-2021 12:41:55pm
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு இருந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காவலர் வேலுச்சாமி (27), சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.

குண்டு துளைத்ததில் காவலர் வேலுச்சாமியின் கீழ்தாடை எலும்புகள் நொறுங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எதற்காக அவர் இப்படி செய்தார் இதற்கான காரணம் என்ன என்று காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

காவல்துறையில் அடிக்கடி தற்கொலை முயற்சிகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.மன உளைச்சல் உள்பட பல்வேறு காரணங்களால் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.

அண்மையில் வேலூர் ஆயுதப்படையில் பணியாறும் அனிதா என்பவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அனிதாவின் கணவர் குபேந்திரன் என்பதும் வேலூர் அரிசி மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை கவனித்துக்கொள்ள பணி மாற்றி தரும்படி உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

 

Tags :

Share via