புழுதிவாக்கத்தில் துணை மின்நிலையம் எப்போது? - அமைச்சர்

by Editor / 06-09-2021 06:43:36pm
புழுதிவாக்கத்தில் துணை மின்நிலையம் எப்போது? - அமைச்சர்

தமிழக சட்டப்பேரவையில் இன்று உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதிகளில் துணை மின்நிலையம் அமைக்கப்படுமா? என சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கேள்வி எழுப்பினர். இவரது கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.

இந்த பதிலில், " உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதியில் பெருகி வரும் மின்தேவை மற்றும் எதிர்கால மின்பழுவினை கருத்தில் கொண்டு புதிய துணை மின்நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டு, நிலம் கண்டறியப்பட்டு வருகிறது.

நிலம் கண்டறியப்பட்டதும் அதற்கான பணிகள் செயல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் மின்பழு பிரச்சனையை தடுக்க 8,905 புதிய மின் மாற்றிகள் அமைக்க கொளத்தூரில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு பகுதியிலும் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் எந்தெந்த பகுதிகளில் புதைவடை கம்பிகள் பாதிக்கப்படாமல் விடுபட்டுள்ளது என ஆராய்ந்து, புதைவடை கேபிள் பாதிக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது " என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via