தமிழக வெற்றிக்கழக அரசு ஐந்து ஆண்டுகள் நீடித்தால் கடன் சுமை 20 லட்சம் கோடியாக உயர்ந்து மக்களை கடனாளியாக்கி விடும்

by Admin / 31-08-2026 01:17:14am
 தமிழக வெற்றிக்கழக அரசு ஐந்து ஆண்டுகள் நீடித்தால் கடன் சுமை 20 லட்சம் கோடியாக உயர்ந்து மக்களை கடனாளியாக்கி விடும்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் செய்தியாளர்களிடம் பேசியவர் தமிழக வெற்றிக்கழக அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றும் அப்படியே நீடித்தால் தமிழகத்தின் கடன் சுமை 20 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்றும் தெரிவித்ததோடு தமிழக வெற்றிக்கழக அரசு ஆட்சி பொறுப்பேற்ற முதல் 100 நாட்களிலே சுமார் 28,000 கோடி கடன் வாங்கி உள்ளது. இதில் வருவாய் செலவிட மட்டுமே 25 ஆயிரம் கோடியாகும். தற்போது தமிழகத்தின் கடன் ரூபாய் 10 லட்சம் கோடியாக உள்ளது. இதே வேகத்தில் கடன் வாங்கினால் தமிழக வெற்றிக்கழக அரசு ஐந்து ஆண்டுகள் நீடித்தால் அது 20 லட்சம் கோடியாக உயர்ந்து மக்களை கடனாளியாக்கி விடும் என்றும் நிதி நிலையை சீரமைக்க தற்போதைய அரசு குழு அமைத்துள்ளது. முந்தைய திமுக அரசும் இதே போல் குழு அமைத்து தான் 5 லட்சம் கோடி கூடுதலாக கடன் வாங்கியது என்றும் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை பற்றி பேச வேண்டிய சட்டமன்றத்தில் அதற்கு முக்கியத்துவம் தராமல் அரசு தனது சொந்த விஷயங்களை விவாதித்து நேரத்தை வீழடிக்கிறது என்றும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பது இல்லை என்றும் அதற்கு பதிலாக ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கின்றனர். மற்றவர்கள் அனுபவம் இன்மையால் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்ததோடு தேர்தல் நேரத்தில் தமிழகம் வெற்றி கழகம் அளித்த பெரிய வாக்குறுதிகள் எதையுமே  அரசு நிறைவேற்ற வில்லை என்றும் ஏதோ ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர் .அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு விண்ணைத்தோடும் அளவுக்கு உள்ளதாகவும் இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது உணவுத்துறை அமைச்சரிடம் இருந்து முறையான பதில் வரவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

 

Tags :

Share via

More stories

Logo