இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்
இன்று தலைமைச் செயலகத்தில் பன்னிரண்டு மணி அளவில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே ஆறுகள் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வார,ஆகாயத்தாமரைகளை அகற்றுதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் தடையின்றி செல்ல தாழ்வான மற்றும் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அங்கு மீட்பு படைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்தல், பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களை தயார் நிலைப்படுத்துதல்,தடையற்ற மின்சாரம் ,பாதுகாப்பான குடிநீர், பொதுமக்களுக்கு உணவு வழங்க சமூக கூடங்கள் தயார் நிலையில் வைத்திருத்தல் போன்ற வசதிகளை செய்தல், மின் கம்பங்கள் ,மின் கோபுரங்கள் போன்றவற்றின் நிலைமையை அறிந்து அதை சீரமைக்க வழிவகை செய்தல், மழைக்காலத்திற்கு முன்பாகவே சாலை பணிகள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
Tags :



















