நான்கு பெண் காவல்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுஅமைத்துள்ளார். தமிழக காவல்துறை தலைவர்- மகேஷ் குமார் அகர்வால்

by Admin / 26-09-2026 12:02:21am
நான்கு பெண் காவல்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுஅமைத்துள்ளார். தமிழக காவல்துறை தலைவர்- மகேஷ் குமார் அகர்வால்

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை விசாரிப்பதற்காக தமிழக காவல்துறை தலைவர் மகேஷ் குமார் அகர்வால் நான்கு பெண் காவல்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளார். சென்னை காவல் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் பிசி தேன்மொழி இக்குழுவிற்கு தலைமை வகிப்பார் என்றும் மேற்கு மண்டல இணை ஆணையர் திசா மிட்டல் காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடிப்பு பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலி ஆகியோ இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மேற்பார்வையில் செயல்படும். இதற்கு முன் விசாரணையில் காவல்துறை உயர் அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டு வழக்கை விரைவில் முடிக்க முயன்றதாக எழுந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக 70 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாற்றுகளையும் இந்த சிறப்பு குழு விசாரணை நடத்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo