கொடிய கொரோனா வைரஸ்களுடன் கூடிய வவ்வால்கள் கண்டுபிடிப்பு..!!!

by Admin / 23-09-2021 09:52:36pm
கொடிய கொரோனா வைரஸ்களுடன் கூடிய வவ்வால்கள் கண்டுபிடிப்பு..!!!


 
லாவோஸ் குகைகளில், கொடிய கொரோனா வைரஸ்களுடன் கூடிய வவ்வால்கள் இருப்பதை பிரான்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பெரும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆனால் வேறு சில விஞ்ஞானிகள் விலங்குகள் வாயிலாக மனிதர்களுக்கு பரவியிருக்க கூடும் என  கூறுகின்றனர்.

 இந்தநிலையில், கொரோனா எங்கிருந்து பரவியது என்பதை அறிய ஆய்வு மேற்கொண்டு வரும் பிரான்ஸ் விஞ்ஞானிகள், சீனாவின் மிக அருகிலுள்ள லாவோஸ் குகைகளில் உள்ள வவ்வால்களின் மாதிரியை கொண்டு பரிசோதித்துள்ளனர்.

அவை சார்ஸ் கோவிட் -2 வைரஸுக்கு இணையான மரபணுவுடன் இருப்பதும், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்து கூடிய திறன் இருப்பதையும் தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

Tags :

Share via