டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி  பாடத்தாள் முதல் தேர்வாக இடம்பெறும்

by Editor / 25-09-2021 05:15:14pm
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி  பாடத்தாள் முதல் தேர்வாக இடம்பெறும்

தமிழ்நாட்டில் இனிமேல் நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முதல் தேர்வாக தமிழ் மொழி பாடத்தாள் இடம்பெறும் வகையில் திருத்தம் கொண்டு வர டி.என்.பி.எஸ்.சி முடிவு எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 3 என்ற என்ற அடிப்படையில் இந்த தேர்வுகள் நடைபெறுகிறது.குரூப் 1, குரூப் 2, குரூப் 3 தேர்வுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் புதிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
அதாவது, அனைத்து தேர்வுகளுக்கு முன்பும் தமிழ் மொழித்தாள் என்ற தேர்வு முதலில் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் குறைந்தது 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற்றால் மட்டுமே அடுத்த தேர்வுகளை எழுத முடியும் என்ற புதிய மாற்றத்தைத் தேர்வாணையம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அரசு பணியில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அரசாணை வெளிவந்தவுடன், டி.என்.பி.சி தேர்வில் புதிய மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் காரணமாகத் தமிழ் மொழி அல்லாதவர்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது என்பதால் முழுக்க முழுக்க தமிழர்கள் மட்டுமே பணி நியமனம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via