பேஸ்புக்கில் Blue Tick பெறும் வழிமுறைகள்!

by Editor / 13-10-2021 07:39:36pm
பேஸ்புக்கில் Blue Tick பெறும் வழிமுறைகள்!

 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பெரிய நிறுவனங்கள் தங்களுக்கென தனி பேஜ்ஜை நிர்வகிப்பார்கள். அதில், அவர்களை பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகளை பகிர்வார்கள். இதுபோன்ற பக்கங்களை அவர்களுடையதுதான் என நாம் தெரிந்து கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி அந்த பக்கம் வெரிஃபை அதாவது (Blue Tick) செய்யப்பட்டிருப்பதை வைத்துதான்.


இணைய உலகில் போலி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இப்போது நம் அன்றாட வாழ்க்கையில் நமது நண்பர்களின் பேஸ்புக் பக்கத்தை போன்று ஒரு புதிய பேக் ஐடி கிரியேட் ஆகியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதனால், முக்கிய பிரபலஙகள் தங்களது சமூக வலைதளப்பக்கங்களை வெரிபை செய்துள்ளனர். அந்த பக்கத்தில் வெளியாகும் தகவல்களை கொண்டு அது சம்மந்தப்பட்ட நபரின் அதிகாரப்பூர்வ கருத்து என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.


பேஸ்புக் பக்கத்தை வெரிபை செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் எளிதாக புளூ டிக் பெறலாம். இதற்கு பணம் ஏதும் செலவு செய்ய தேவையில்லை. நாம் பேஸ்புக்கிற்கு சமர்ப்பிக்கும் ஆவணம் சரியானதாக இருக்கும் பட்சத்தில் பேஸ்புக் நிறுவனம் அதை சரிபார்த்துவிட்டு நமது பக்கம் வெரிபை செய்வதற்கு உரித்தான பக்கம் என புளூ வெரிவை வழங்கும். இல்லையேல் நமது விண்ணப்பத்தை நிராகரிக்கப்படும்.பேஸ்புக் பக்கத்தை அல்லது புரோஃபைலை வெரி-வை செய்ய முதலில் பேஸ்புக்கில் setting & privacy என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


    பின்னர் தோன்றும் விண்டோவில் setting என்பதை கிளிக் செய்து அடுத்து தோன்றும் பக்கத்தில் support inbox என்பதை கிளிக் செய்யவும். அதில் Verification என்பதை சர்ச் செய்யவும்.


    அடுத்து தோன்றும் பக்கத்தில் How do I request a verified badge on Facebook? என்பதை கிளிக் செய்தால் fill out the form என்ற ஆப்சன் தோன்றும் அதை கிளிக் செய்யவும்


    அடுத்ததாக வெரிபை செய்ய வேண்டியது பேஜ் அல்லது புரோபைல் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.அடுத்து உங்களது ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்து சப்மிட் கொடுக்க வேண்டும்.இதையடுத்து பேஸ்புக் நீங்கள் சப்மிட் செய்த தகவல்களை சரிபார்த்து விட்டு உங்களது பக்கம் அல்லது புரோபைல் வெரிபேகன் அதாவது உங்கள் பெயர் அருகில் Blue Tick வழங்கப்படும். அதிகபட்சமாக 24மணி நேரத்திற்குள் உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு வெரிபை அக்கவுண்ட்டாக மாறிவிடும். சில பேருக்கு சரியான தகவல்களை தெரிவிக்காதபட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

 

Tags :

Share via