சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பருவத் தேர்வுகள்

by Editor / 19-10-2021 09:19:12am
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பருவத் தேர்வுகள்

இந்தியாவில் கொரோனா குறைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.கொரோனா காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாது அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டு இரு பருவதேர்வு முறையை சிபிஎஸ்இ நிர்வாகம் நடைமுறைப்படுத்தி உள்ளது. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் அப்ஜெக்டிவ் முறையில் தேர்வு நடைபெறும் என்றும் இந்த தேர்வு 90 நிமிடம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர் காலத்தை கருத்தில்கொண்டு தேர்வு காலை 11:30 மணிக்கு தொடங்கும் என்றும் தேர்வுக்குப் பிறகு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது இரண்டாவது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிபிஎஸ்இ 10 மற்றும்12 ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30-ஆம் தேதி முதல் பருவத்தேர்வு தொடங்கும் என்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பருவத் தேர்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via