தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் - இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமனம்

by Editor / 31-10-2021 02:31:12pm
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் -  இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமனம்

 தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட உள்ள தன்னார்வலர்கள், தினமும் ஒன்று முதல் ஒன்ற மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் என, புதுமையான முறையில் பாடங்களைச் சொல்லி கொடுக்க உள்ளனர்.

இந்நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக, இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனராக அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via