2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்த இருவரின் உடல்களை புதைக்க மறந்து மருத்துவமனை

by Editor / 30-11-2021 06:43:46pm
 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்த இருவரின் உடல்களை புதைக்க மறந்து மருத்துவமனை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் துர்கா சுமித்ரா (வயது 40) மற்றும் முனிராஜ் (வயது 50) ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் 2020, ஜூலை 2ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 
அந்த நேரத்தில், கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்ததால் , நோயாளிகளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல், மருத்துவமனை நிர்வாகமே தகனம் செய்தது. இதனால், நோயாளிகளின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டதுடன், உடல்கள் தகனம் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு மேலாக இருவரது உடல்கள் மருத்துவமனையின் பிணவறையிலேயே இருந்துள்ளது. பழைய பிணவறையை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் துர்நாற்றத்தை உணர்ந்து அங்கு தேடிப்பார்த்ததில், குளிர்சாதனப்பெட்டியில் பாதி அழுகிய நிலையில் இருவரின் உடலையும் கண்டனர். கொரோனா மரணங்கள் குறைந்துவிட்டதால், பழைய பிணவறை பயன்படுத்தப்படாமல் இருந்ததாகவும், அதனால், குளிர்சாதனப்பெட்டியில் இருந்த இருவரின் உடல்களை கவனிக்கவில்லை எனவும் மருத்துவமனையை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.
இந்த தகவல் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவரவே அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

Tags :

Share via