---சில வரி செய்திகள்---

by Editor / 01-12-2021 03:52:08pm
---சில வரி செய்திகள்---


திருப்பதி - திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும், இரண்டாவது மலைப்பாதையின் வழியில் இரு வெவ்வேறு இடங்களில் கடும் மண்சரிவு.

தமிழகத்தில் நேற்று முதல் இன்று  வரை வெளி நாடுகளில் இருந்து வந்த 134 பேரிடம் மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.இதில் யாருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்கவே கோருகிறோம்; ஆளும் தரப்பு பேசுவது மட்டும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது, எதிர்கட்சிகள் பேசினால் ஒளிபரப்பு செய்ய மறுக்கிறார்கள்--திமுக எம்.பி திருச்சி சிவா.


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணு கழிவு எரிபொருள் ரஷ்யா வுக்கு முழுவதுமாக திருப்பி அனுப்படவில்லை. மாறாக அணுஉலை வளாகத்தில் இரண்டு இடங்களில் சேமிக்கப்படுகிறது. ஆனால் இதனால் எந்த பாதிப்பும் இல்லை-..மத்திய அரசு மக்களவையில் தகவல்.

தண்டவாளம் உற்பத்தி பொன்மலை பணிமனைக்கு அனுமதி வழங்காதது ஏன்? - மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேச்சு.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை அறிக்கை டிசம்பர் 3ம் தேதி வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்.

நெல்லையை அடுத்த பாலாமடை ஊராட்சிக்கு உட்பட்ட காட்டாம்புளி கிராமத்தில் லட்சுமணன் என்பவரது மகள்  தயா (வயது 36), அப்பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

 

Tags :

Share via