புல்லி பாய் எனும் செயலியை உருவாக்கிய  21 வயதான நீரஜ் பிஷ்னோயை அசாமில் பதுங்கியிருந்த டெல்லி சிறப்பு படை போலீஸார் கைது செய்தனர்.

by Editor / 06-01-2022 10:11:40pm
புல்லி பாய் எனும் செயலியை உருவாக்கிய  21 வயதான நீரஜ் பிஷ்னோயை அசாமில் பதுங்கியிருந்த  டெல்லி சிறப்பு படை போலீஸார் கைது செய்தனர்.

 புல்லி பாய் எனும் செயலியில் பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், முஸ்லீம் பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை கடந்த ஜனவரி 1ஆம் தேதி பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாக அந்த செயலியில் அறிவிக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சிஅலையை ஏற்படுத்திய நிலையில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் புல்லி பாய் செயலி நிறுவனத்தின்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதன் தொடர்ச்சியாக காவல்துறை வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் இந்த செயலியை உருவாக்கிய  21 வயதான நீரஜ் பிஷ்னோயை அசாமில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்தது டெல்லி காவல்துறை,புல்லி பாய் செயலி மூலம்குறிப்பிட்ட சமூக  பெண்களை ஏலமிட்ட விவகாரத்தில்  டெல்லி போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அசாமில் பதுங்கியிருந்த இவரை டெல்லி சிறப்பு படை போலீஸார் கைது செய்தனர். இவருடன் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


 

 

Tags :

Share via