ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம்? : பிரான்ஸ் தலைமையில் சமரச பேச்சு

by Admin / 27-01-2022 11:13:40am
ரஷ்யா - உக்ரைன் போர்  நிறுத்த ஒப்பந்தம்? : பிரான்ஸ்  தலைமையில் சமரச பேச்சு

நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கில் சுமார் 1 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா நிறுத்திஉள்ளது. அது மட்டுமின்றி ஏராளமான தளவாடங்களை உக்ரைனின் கிழக்கு எல்லையில் ரஷ்யா குவித்து உள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் மூளக்கூடிய ஆபத்து உருவானது. உக்ரைன் மீது போர் தொடுத்தால் பெரும் அழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என ரஷ்யாவை அமெரிக்கா அதிபர் ஜோபைடன் எச்சரித்த போதிலும் அதனை ரஷ்யா சிறிதும் பொருட்படுத்தவில்லை.
 
இதையடுத்து உக்ரைனுக்கு ஆதரவாக 8 ஆயிரத்து 500 அமெரிக்க  துருப்புகளை உக்ரைன் எல்லையில் நிலை நிறுத்தியது அமெரிக்கா. உக்ரைன் மீது போர் தொடுக்கும் முடிவை ரஷ்யா மாற்றிக் கொள்ள அமெரிக்கா இறுதி வரை முயற்சி மேற்கொண்டது. 

இந்த நிலையில் போரை நிறுவது தொடர்பாக பிரான்ஸ்  தலைமையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவாத்தை நடத்தப்பட்டது.  

பிரான்ஸ் அதிபர்  உதவியாளர் தலைமையில் பாரீசில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து 8 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

 
 

 

Tags :

Share via