ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ..இரவுகளின் அரசி.

by Editor / 12-02-2022 04:18:25pm
ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ..இரவுகளின் அரசி.

இந்த பிரம்ம கமலம் பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், இரவில் பூத்து குலுங்கும். பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூக்களையே படங்களில் காண்கிறீர்கள். இளவேனில் காலத்தில் மாத்திரமே பூக்கும் இந்த பிரம்ம கமலம் எனப்படும் பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும் அதிசயமுடையது. அத்துடன், இந்தப் பூவின் வாசம் அந்த பிரதேசத்தையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. இவை ஓர்க்கிட் வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது. ஒரே செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது. செடியின் இலை விளிம்பு பகுதியில் இருந்து பூ பூக்கிறது.
பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால், பிரம்மா படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் காணப்படும். அதுமட்டுமல்லாமல், இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், அந்த மலர் மலரும் போது, நாம் என்ன நினைத்து வேண்டினாலும், அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை. 
அதிலும் அந்த அற்புத மலர், ஹிமாலாயாவிலேயே அதிகம் காணமுடியும். ஆனால் தற்போது இந்த மலரை சிலசமயங்களில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக்க காலநிலைகளிலும் காண இயலும். ஆகவே இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்ம கமலத்தை நம் வீட்டு தோட்டத்தில் வளர்க்க, ஒரு சிறந்த தோட்டப்பராமரிப்பு மற்றும் இந்த செடி பற்றிய அறிவு இருந்தால் இந்த செடியை வளர்க்கலாம். இல்லையென்றாலும் அந்த செடிப் பற்றிய சில டிப்ஸ்களை தோட்டக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். அதை கவனமாகப் படித்து, அந்த செடியை வளர்த்துப் பயன் பெறுங்களேன்.

பிரம்ம கமலச் செடி பொதுவாக வெட்டப்பட்ட மற்றொரு செடியின் துண்டிலிருந்தும் வளரும். அதிலும் அதன் இலைகளைப் பார்த்தால், தட்டையாக மற்றும் தடிமனாக இருக்கும். இதன் தண்டு பகுதி எப்போதும் இலைகளால் சுற்றப்பட்டிருக்கும். மேலும் இதிலிருந்து வரும் பிரம்ம கமலப் பூ இலைகளிலிருந்தே வளர்கிறது. 
பிரம்ம கமலச் செடியை குளிர் காலத்திற்கு சற்று முன்னர் வைக்க வேண்டும். அதிலும் இந்த செடி, மிகவும் குளிர்ந்த ஹிமாலயாவில் வளர்வதால், தோட்டத்தில் சற்று குளிர்ந்த இடத்தில் வைத்து வளர்த்தால், மிகவும் நன்றாக வளரும். 
அந்த மலர் வருவதற்கு நேரடியான சூரிய வெளிச்சம் படாதவாறு மற்றும் வளமான, பாறை மண்ணில் வைக்க வேண்டும். அதற்காக மிகவும் கடினமான மண்ணை நான் சொல்லவில்லை, மலைப்பிரதேசத்தில் வளர்ந்ததால், சற்று மலை மண்ணாக இருந்தால் நல்லது. அதிலும் மண் தண்ணீரை நன்கு உறிஞ்சுமாறும், சற்று சீரை தேக்கி வைக்குமாறும் இருக்க வேண்டும். 

பிரம்ம கமலம் ஒரு வித காக்டஸ் செடி. இதற்கு நிறைய தண்ணீர் வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விட வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் வற்றி, செடி வாடி இறந்துவிடும். இந்த செடி மிகவும் நீளமாக வளராது. 
இது ஒரு குறுந்தாவரம் தான். மேலும் இது சற்று அதிகமான நீளத்தில் வளர்ந்தால், அதனை வெட்டி தனியாக ஒரு தொட்டியில் வளர்க்கலாம். அதிலும் இந்த பிரம்ம கமலம் பொதுவாக இரவிலேயே மலரும் பூ வகையை சேர்ந்தது. சிலசமயங்களில் மாலை நேரத்தில் பூவானது முழுமையாக மலர்ந்துவிடும், இல்லையெனில் இரவு 10 மணிக்கு மேல் தான் முழுமையாக மலரும். ஆகவே அதிர்ஷ்டம் இருந்தால், இந்த செடியை வைத்து மகிழுங்கள். 

பூ சென்னை முகப்பேரில் உள்ள ஜஷ்வந்த் சிங் என்பவர் வீட்டில் இரவில் மலர்ந்துள்ளது.  அரிய வகை பூவாக கருதப்படும் இந்த பிரம்ம கமலம் பூவை ஜஷ்வந்த் சிங் இமாலய மலைகளில் இருந்து எடுத்து வந்து வளர்த்து வந்துள்ளார்.
பல ஆண்டுகளாக வளர்த்து வந்த நிலையில் கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த பூ மலர்ந்த நிலையில் தற்போது மீண்டும் அவரது வீட்டுத் தோட்டத்தில் பிரம்ம கமலம் பூ இரவில் மலர்ந்து காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ..இரவுகளின் அரசி.
 

Tags :

Share via